முகப்பு
இந்தியா

தில்லியில் புதிதாக 101 பேருக்கு கரோனா

தில்லியில் புதிதாக 101 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:31 AM
கோப்புப்படம்
பகிர்:


தில்லியில் புதிதாக 101 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றி சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பின்படி:

"புதிதாக 101 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 66,397 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதன் விகிதம் 0.15 சதவிகிதம். 

மேலும் 119 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4 பேர் பலியாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, தில்லியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,34,094 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 14,07,592 பேர் குணமடைந்துள்ளனர். 24,971 பேர் பலியாகியுள்ளனர். நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,531 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தடுப்பூசி:

கடந்த 24 மணி நேரத்தில் 2,04,711 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இதில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 1,64,715 பேர். இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 39,996 பேர்.

தில்லியில் இதுவரை மொத்தம் 75,50,828 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.