கோப்புப்படம் 
இந்தியா

5.84 கோடி பேர் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டனர்: மத்திய அரசு

​நாட்டில் இதுவரை மொத்தம் 5.84 கோடி பேர் கரோனா நோய்த் தொற்றுக்கான இரண்டு தவணை தடுப்பூசியையும் செலுத்திக்கொண்டதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

DIN


நாட்டில் இதுவரை மொத்தம் 5.84 கோடி பேர் கரோனா நோய்த் தொற்றுக்கான இரண்டு தவணை தடுப்பூசியையும் செலுத்திக்கொண்டதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

அமைச்சகம் சார்பாக செவ்வாய்க்கிழமை மாலை செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் இணைச் செயலர் லவ் அகர்வால் கூறுகையில், "கரோனா பாதிப்பில் இந்தியா உச்சம் தொட்டதிலிருந்து பாதிப்பு எண்ணிக்கைகள் தொடர்ந்து குறைந்துகொண்டே வருகின்றன. குணமடைவோர் விகிதம் 96.9 சதவிகிதமாக உள்ளது. நாட்டில் முதல் தவணை தடுப்பூசி மட்டும் செலுத்திக் கொண்டுள்ளவர்கள் 27.27 கோடி பேர். இரண்டு தவணை தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டவர்கள் 5.84 கோடி பேர்" என்றார்.

மேலும், 32 கோடி தடுப்பூசி செலுத்த இந்தியா 163 நாள்களையே எடுத்துக்கொண்டதாகவும், இதற்கு அமெரிக்கா 193 நாள்களை எடுத்துக்கொண்டதாகவும் சுகாதாரத் துறை அமைச்சகம் தரவுகளை வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT