'நிதியமைச்சர் அறிவித்துள்ள தொகுப்பை எந்த குடும்பத்தாலும் பயன்படுத்த முடியாது' - ராகுல் காந்தி
மத்திய நிதியமைச்சர் அறிவித்துள்ள பொருளாதார தொகுப்பை எந்தவொரு குடும்பத்தாலும் பயன்படுத்த முடியாது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் அறிவித்துள்ள பொருளாதார தொகுப்பை எந்தவொரு குடும்பத்தாலும் பயன்படுத்த முடியாது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பொருளாதாரம், கரோனா தடுப்பூசி, பல்வேறு திட்டங்கள் என மத்திய அரசின் கொள்கைகள், பல்வேறு நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கருத்து தெரிவித்து வருகிறார்.
அந்தவகையில், இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,
'மத்திய நிதியமைச்சர் அறிவித்த 'பொருளாதாரத் தொகுப்பை' எந்தவொரு குடும்பமும் தங்களது வாழ்க்கை, உணவு, மருந்து, குழந்தைகளின் பள்ளிக் கட்டணங்களுக்காக பயன்படுத்த முடியாது.
இது தொகுப்பு அல்ல, மற்றொரு புரளி!' என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கரோனா பாதிப்பிலிருந்து மீளும் வகையில், 8 பொருளாதார நிவாரண நடவடிக்கைகளை அறிவித்தார்.