இந்தியா

ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிக்கு மத்திய அரசு விரைவில் அனுமதி?

DIN

ஜான்சன் அண்ட் ஜான்சன் கரோனா தடுப்பூசியை இந்தியாவில் அனுமதிப்பது தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் கோவிஷீல்டு. கோவேக்சின் ஆகிய இந்தியத் தயாரிப்பு தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இதற்கு அடுத்தபடியாக ஸ்புட்னிக் வி தடுப்பூசி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நான்காவதாக மாடர்னா தடுப்பூசிக்கும் இன்று மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

இந்நிலையில், தற்போது பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்டநாடுகளில்  பயன்பாட்டில் இருக்கும் ஜான்சன் அண்ட் ஜான்சன் கரோனா தடுப்பூசியை இந்தியாவுக்கு கொண்டு வருவது குறித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அந்நிறுவனத்தின் இந்திய செய்தித் தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார். 

அப்போது ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிக்கு இந்தியாவில் பரிசோதனை தேவையில்லை என்று மத்திய அரசு கூறியதாக அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

SCROLL FOR NEXT