நாட்டில் 33.28 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: வயதுவாரியாக முழு விவரம்
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 36,51,983 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை காலை தெரிவித்தது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 36,51,983 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை காலை தெரிவித்தது. இதுவரை மொத்தம் 33,28,54,527 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
மேலும், வயதுவாரியாக முதல் தவணை, இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டோர் தரவுகளையும் அமைச்சகம் செய்திக் குறிப்பில் வெளியிட்டுள்ளது.
அதன்படி:
சுகாதாரப் பணியாளர்கள்:
முதல் தவணை - 1,02,08,162
இரண்டாவது தவணை - 72,43,081
முன்களப் பணியாளர்கள்:
முதல் தவணை - 1,74,84,539
இரண்டாவது தவணை - 94,80,633
18-44 வயதினர்:
முதல் தவணை - 9,00,61,716
இரண்டாவது தவணை - 20,87,331
45-59 வயதினர்:
முதல் தவணை - 8,82,70,464
இரண்டாவது தவணை - 1,59,11,279
60 வயதுக்கு மேற்பட்டோர்
முதல் தவணை - 6,79,88,719
இரண்டாவது தவணை - 2,41,18,603
மொத்தம் 33,28,54,527