கர்நாடகத்தில் புதிதாக 3,382 பேருக்கு கரோனா
கர்நாடகத்தில் நேற்று (ஜூன் 29) மட்டும் 3,382 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள விகிதம் 1.97 சதவிகிதம்.
கர்நாடகத்தில் நேற்று (ஜூன் 29) மட்டும் 3,382 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள விகிதம் 1.97 சதவிகிதம்.
இதைத் தொடர்ந்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 28,43,810 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 12,763 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 27,32,242 பேர் குணமடைந்துள்ளனர்.
நேற்று மட்டும் 111 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதனால், இறப்பு விகிதம் 3.28 சதவிகிதமாகப் பதிவானது. இதுவரை மொத்தம் 35,040 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
இன்றைய நிலவரப்படி மாநிலத்தில் 76,505 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.