முகப்பு
இந்தியா

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியமைத்தால் லவ் ஜிகாத், பசு கடத்தலுக்கு தடை: உ.பி. முதல்வா் யோகி ஆதித்யநாத்

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியமைத்தால் லவ் ஜிகாத், பசு கடத்தல் ஆகியவை தடை செய்யப்படும் என்று உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
பகிர்:

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியமைத்தால் லவ் ஜிகாத், பசு கடத்தல் ஆகியவை தடை செய்யப்படும் என்று உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் தெரிவித்தாா்.

மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டம் கஸோல் பகுதியில் செவ்வாய்க்கிழமை பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் பங்கேற்று பேசியதாவது:

ஒரு காலத்தில் ஒட்டுமொத்த தேசத்துக்கும் வழிகாட்டியாக இருந்த மேற்கு வங்கத்தில் இன்று சட்டத்துக்குக் கட்டுப்படாத சூழல் நிலவுகிறது. வாக்கு வங்கிக்காக ஒரு சாராரை திருப்திப்படுத்தும் அரசியல் இந்த மாநிலத்தின் பாதுகாப்பை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்தின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதை திரிணமூல் காங்கிரஸ் அரசு விரும்பவில்லை. ஆனால் சட்டவிரோதமாக குடியேறுவோருடன் அந்த அரசுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை.

இந்த மாநிலத்தில் லவ் ஜிகாத் சம்பவங்கள் நடைபெறுகின்றன. பசுக்கள் கடத்தப்படுகின்றன. இங்கு பாஜக ஆட்சியமைத்தால் அவை இரண்டும் தடுத்து நிறுத்தப்படும். குறிப்பாக பாஜக ஆட்சியமைத்த 24 மணி நேரத்தில் பசு கடத்தலுக்கு தடை விதிக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments