கோப்புப்படம் 
இந்தியா

ஸ்வீடனில் கத்திக்குத்து தாக்குதல்: 8 பேர் காயம்

ஸ்வீடனில் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் 8 பேர் காயமடைந்தனர். 

DIN

ஸ்வீடனில் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் 8 பேர் காயமடைந்தனர். 
ஸ்வீடன் நாட்டில் தெற்கு பகுதியில் உள்ள வெட்லண்டா பகுதியில் நேற்று பொதுமக்கள் மீது மர்ம நபர் ஒருவர் திடீரென தான் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக தாக்குதல் நடத்தினார். இந்த சம்பவத்தில் 8 பேர் காயமடைந்தனர். 
தகவல்அறிந்து நிகழ்விடத்துக்கு வந்த ஜான்கோபிங் காவல்துறையினர் மர்ம நபர் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர் காயமடைந்தார். 
பொதுமக்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதற்கான காரணம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு சுவீடன் நாட்டின் பிரதமர் ஸ்டீபன் லோப்வன் கண்டனம் தெரிவித்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜேஇஇ முதன்மைத் தேர்வு! மாணவர்களுக்கான மிக முக்கிய அறிவுறுத்தல்கள் என்னென்ன?

ஜன. 24 வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர்!

3 ஆவது நாளாக..! ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை!

பாஜக தேசிய தலைவராகப் பொறுப்பேற்றார் நிதின் நவீன்!

இந்தியாவில் மலிவாகக் கிடைக்கும் இரண்டு பொருள்கள்! உலக சுகாதார நிறுவனம் சிவப்புக்கொடி

SCROLL FOR NEXT