ஆந்திரத்தில் மேலும் 102 பேருக்கு கரோனா தொற்று
ஆந்திரத்தில் புதிதாக 102 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆந்திரத்தில் புதிதாக 102 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,90,317 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 871 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கரோனாவிலிருந்து இதுவரை 8,82,275 பேர் குணமடைந்துள்ளனர். அதேசமயம் கரோனாவுக்கு இதுவரை 7,171 பேர் பலியாகியுள்ளனர்.