பாஜகவில் இணைந்த 6ஆவது நாளில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ‘மெட்ரோ மேன்’ 
இந்தியா

பாஜகவில் இணைந்த ஒரு வாரத்திற்குள்ளாகவே முதல்வர் வேட்பாளரான ‘மெட்ரோ மேன்’

கேரள பாஜகவில் இணைந்த 6 நாள்களிலேயே மெட்ரோ மேன் என அழைக்கப்படும் ஸ்ரீதரன் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

DIN

கேரள பாஜகவில் இணைந்த 6 நாள்களிலேயே மெட்ரோ மேன் என அழைக்கப்படும் ஸ்ரீதரன் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் முதன் முதலில் மெட்ரோ ரயில் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியதற்காக ‘மெட்ரோமேன்’ என்று அழைக்கப்பட்டு வருவபவர் இ.ஸ்ரீதரன். இவர் கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி கேரள பாஜகவில் இணைந்தார். 

கேரள மாநிலம் மலப்புரத்தில் பாஜக மாநிலத் தலைவர் சுரேந்திரன் தலைமையில் நடைபெற்ற விஜய் யாத்ராவில் மத்திய அமைச்சர் ஆர்கே சிங் முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார்.

இந்நிலையில் கட்சியில் இணைந்த ஒரு வாரத்திற்குள்ளாகவே  ஸ்ரீதரன் நடைபெற உள்ள கேரள சட்டபேரவைத் தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளார்.

இதுதொடர்பான அறிவிப்பை மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் வியாழக்கிழமை வெளியிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை எச்சரிக்கை!

SCROLL FOR NEXT