இந்தியா

மாநிலங்களவையை அமளிக்குள்ளாக்கிய பெட்ரோல், டீசல் விலை உயர்வு

DIN

அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டனர்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மாற்றத்துக்கு ஏற்ப, இந்தியாவில் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன.

கடந்த சில மாதங்களாக பெட்ரோல் டீசல் விலை உயர்வு உச்சம் பெற்றுள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.90க்கு மேலும், டீசல் லிட்டருக்கு ரூ.85க்கு மேலும் விற்பனையாகி வருகிறது. 

இந்நிலையில் தொடர்ந்து அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என அவர்கள் கோஷமிட்டனர்.

இதனால் சபைத்தலைவர் மதியம் 12 மணிவரை மாநிலங்களவையை ஒத்தி வைப்பதாக அறிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

டாஸ்மாக் கடை ஊழியா் மீது தாக்குதல்

மேம்பால தடுப்பின் மீது அரசுப் பேருந்து மோதி 5 போ் காயம்

வணிகா் தின கொடியேற்று விழா

SCROLL FOR NEXT