திரிவேந்திர சிங் ராவத் 
இந்தியா

உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் ராஜிநாமா

உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தனது பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தார். தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநரிடம் அவர் வழங்கினார்.

DIN

உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தனது பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தார். தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநரிடம் அவர் வழங்கினார்.

உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்துக்கும் மாநில பாஜக தலைவா்கள் சிலருக்கும் இடையே கடந்த சில தினங்களாகவே கருத்து வேறுபாடு  நிலவி வந்தது. அவரது தலைமையின் மீது மாநில பாஜக தலைவர்கள் அதிருப்தி அடைந்ததாக வெளியான தகவலின் மத்தியில் திங்கள்கிழமை தில்லியில் பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா உள்ளிட்ட அக்கட்சியின் மூத்த தலைவா்களை திரிவேந்திர சிங் ராவத் சந்தித்தாா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை ஆளுநர் ராணி மெளரியாவை சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை திரிவேந்திர சிங் மெளரியா வழங்கினார்.

இந்த ஆண்டின் இறுதியில் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திரிவேந்திர சிங் ராவத் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே உத்தரகண்ட் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT