மகாராஷ்டிரத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா: ஒரே நாளில் 14,317 பேருக்கு பாதிப்பு
மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 14,317 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 14,317 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 14,317 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 22,66,374ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவுக்கு இன்று மேலும் 57 பேர் பலியானார்கள். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 52,667ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 7193 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 21,06,400ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி 1,06,070 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரத்தில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு ஒருசில இடங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.