முகப்பு
இந்தியா

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் எடியூரப்பா

கர்நாடக முதல்வர் எடியூரப்பா வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:43 PM
கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட எடியூரப்பா
பகிர்:

கர்நாடக முதல்வர் எடியூரப்பா வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

நாட்டில் முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது..

முதல் நாளில், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட சில தலைவர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில், வெள்ளிக்கிழமை கர்நாடக முதல்வர் எடியூரப்பா கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட எடியூரப்பா, தகுதி வாய்ந்த  அனைவரும் அவசியம் கரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள முன்வர வேண்டும் அறிவுறுத்தினார்.

முழு கட்டுரையைப் படிக்க →