உத்தரகண்ட் மாநில பாஜக தலைவராக மதன் கௌசிக் நியமனம்
உத்தரகண்ட் மாநில பாஜக தலைவராக மதன் கௌசிக் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாஉத்தரகண்ட் மாநில பாஜக தலைவராக மதன் கௌசிக் நியமனம்
உத்தரகண்ட் மாநில பாஜக தலைவராக மதன் கௌசிக் நியமிக்கப்பட்டுள்ளார்.
உத்தரகண்ட் மாநில பாஜக தலைவராக மதன் கௌசிக் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், உத்தரகண்ட் மாநில பாஜக தலைவராக நான் நியமிக்கப்பட்டுள்ளேன். பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு நன்றி கூறுகிறேன்.
2022-ல் உத்தரகண்ட் மாநிலத்தில் மீண்டும் பாஜக தலைமையிலான அரசு அமையும் என உறுதி கூறுகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
உத்தரகண்ட் முதல்வராக இருந்த திரிவேந்திர சிங் ராவத், கட்சித் தலைமை கேட்டுக் கொண்டதன் பேரில் தனது பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தாா்.
அதைத்தொடர்ந்து உத்தரகண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டாா். தற்போது அந்த வரிசையில் உத்தரகண்ட் மாநில பாஜகவின் தலைவரும் மாற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.