ஆந்திரத்தில் மேலும் 175 பேருக்கு கரோனா தொற்று
ஆந்திரத்தில் புதிதாக 175 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆந்திரத்தில் புதிதாக 175 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,91,563 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 1268 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று 132 பேர் குணமடைந்ததைத் தொடர்ந்து கரோனாவிலிருந்து இதுவரை குணமடைந்தோர் எண்ணிகை 8,83,113 ஆக உயர்ந்துள்ளது.கரோனா தொற்று பாதிப்பு காரணமாக இன்று 2 பேர் பலியாகியுள்ளனர். அதேசமயம் கரோனாவுக்கு இதுவரை 7,182 பேர் பலியாகியுள்ளனர்.