இந்தியா

கேரளத்தில் 115 தொகுதிகளில் பாஜக போட்டி: வேட்பாளர்கள் அறிவிப்பு

DIN


கேரள பேரவைத் தேர்தலில் பாஜக 115 தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாகவும், 25 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்குவதாகவும் அக்கட்சித் தலைமை ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

மேலும் 115 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் அக்கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ளார்.

கேரள பாஜக தலைவர் கே. சுரேந்திரன் மன்ஜேஷ்வர் மற்றும் கொன்னி என 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். பாஜகவில் அண்மையில் இணைந்த மெட்ரோமேன் என அழைக்கப்படும் ஸ்ரீதரன் பாலக்காடு தொகுதியில் களமிறங்குகிறார். திரிச்சூர் தொகுதியில் நடிகர் சுரேஷ் கோபியும், முன்னாள் மாநிலத் தலைவர் கும்மனம் ராஜசேகரன் நேமம் தொகுதியிலும், முன்னாள் டிஜிபி ஜேக்கப் தாமஸ் இரிஞ்சாலக்குடா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

140 தொகுதிகள் கொண்ட கேரள பேரவைக்கு ஏப்ரல் 6-இல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மே 2 வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

SCROLL FOR NEXT