முகப்பு
இந்தியா

கேரளத்தில் புதிதாக 1,054 பேருக்கு கரோனா

கேரளத்தில் புதிதாக 1,054 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
கோப்புப்படம்
பகிர்:


கேரளத்தில் புதிதாக 1,054 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரள கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தகவல்களை அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளது:

Advertisement

"கேரளத்தில் புதிதாக 1,054 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள் 33 பேர். 903 பேருக்கு தொடர்பிலிருந்ததன் மூலம் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. 113 பேருக்கு எவ்வாறு தொற்று பாதிப்பு ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.

கடந்த 24 மணி நேரத்தில் 38,410 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. 

மேலும் 11 பேர் பலியாகியிருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 4,407 பேர் பலியாகியுள்ளனர்.

3,463 பேருக்கு நோய்த் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 10,60,560 பேர் குணமடைந்துள்ளனர்.

27,057 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments