அமராவதி நில முறைகேடு வழக்கு: சந்திரபாபு நாயுடுவுக்கு சிஐடி நோட்டீஸ் 
இந்தியா

அமராவதி நில முறைகேடு வழக்கு: சந்திரபாபு நாயுடுவுக்கு சிஐடி நோட்டீஸ்

ஆந்திர மாநிலத்தின் குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி), விசாரணைக்கு ஆஜராகுமாறு முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

DIN

ஹைதராபாத்: அமராவதி நில முறைகேடு வழக்கில், முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்திருக்கும் ஆந்திர மாநிலத்தின் குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி), விசாரணைக்கு ஆஜராகுமாறு முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரித்த போது, புதிய தலைநகர் உருவாக்க விவசாய நிலங்களைக் கையகப்படுத்தியதில் முறைகேடு எழுந்ததாகப் புகார் அளிக்கப்பட்டது.

இந்த வழக்கில், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பங்கு என்ன என்பது குறித்து விசாரிக்கும் வகையில், விசாரணைக்கு ஆஜராகுமாறு சிஐடி தரப்பில் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிஐடியின் இரண்டு சிறப்புக் குழு, சந்திரபாபு நாயுடுவின் இல்லத்துக்கு வந்து, வரும் 23-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அளித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாருங்கள்...

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

SCROLL FOR NEXT