கரோனா: சுகாதாரத்துறையுடன் கேஜரிவால் ஆலோசனை
தில்லியில் கரோனா பரவல் அதிகரித்து வருவது குறித்து சுகாதாரத்துறையினருடன் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
தில்லியில் கரோனா பரவல் குறித்து சுகாதாரத்துறையினருடன் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தலைநகரான தில்லியிலும் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
தில்லியில் கரோனா பரவல் நாளுக்கு நாள் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், சுகாதாரத்துறையினருடன் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
இதில், சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
தில்லியில் நேற்று (மார்ச் 17) மாலை 8 மணி நிலவரப்படி புதிதாக 536 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,45,025 ஆக உயர்ந்துள்ளது.