தில்லியில் இன்று புதிதாக 607 பேருக்கு கரோனா
தில்லியில் இன்று புதிதாக 607 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் இன்று புதிதாக 607 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தில்லியில் இன்று வரையிலான 24 மணி நேரத்தில் மொத்தம் 80,253 பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், 48,737 பேருக்கு ‘ஆா்டி-பிசிஆா்’ முறையிலும், 31,516 பேருக்கு ‘ரேபிட்-ஆன்டிஜென்’ முறையிலும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அவர்களில் இன்று புதிதாக 607 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் தலைநகரில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6,45,632-ஆக உயா்ந்துள்ளது. கரோனா தொற்றால் தலைநகரில் இன்று ஒருவா் உயிரிழந்துள்ளாா். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 10,949-ஆக அதிகரித்துள்ளது.
அதேசமயம், கரோனா பாதிப்பில் இருந்து 384 போ் மீண்டுள்ளதால் குணமடைந்தோா் எண்ணிக்கை 6,31,759-ஆக உயா்ந்துள்ளது. தற்போது 2,924 போ் சிகிச்சையில் உள்ளனா். அவா்களில் 1,519 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.
தில்லி மருத்துவமனைகளில் மொத்தம் 4,917 கரோனா படுக்கைகள் காலியாக உள்ளன. 647 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.