பஞ்சாபில் 9 மாவட்டங்களில் இரவு நேரப் பொதுமுடக்க நேரம் நீட்டிப்பு
பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர், அமிர்தசரஸ் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அதிகரித்துவரும் கரோனா பரவலால் இரவு நேர பொதுமுடக்க நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர், அமிர்தசரஸ் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அதிகரித்துவரும் கரோனா பரவலால் இரவு நேர பொதுமுடக்க நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவலால் பல்வேறு நகரங்களில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தின் 9 மாவட்டங்களில் விதிக்கப்பட்டிருந்த இரவு நேரப் பொதுமுடக்கத்தின் நேரம் 9 மணியிலிருந்து 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. லூதியானா, ஜலந்தர், பாட்டியாலா, மொஹாலி, அமிர்தசரஸ், குர்தாஸ்பூர், ஹோஷியார்பூர், கபுர்தலா மற்றும் ரோபார் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இரவு 11 மணியிலிருந்து 5 மணி வரை இரவு நேர பொதுமுடக்கம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாபில் இதுவரை 2 லட்சத்து 3 ஆயிரத்து 49 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.