அதிர்ச்சித் தகவல்: 102 நாள்களுக்குப் பின் ஒருநாள் கரோனா பாதிப்பு 35,000 ஆக அதிகரிப்பு
நாட்டில் கரோனா பேரிடருக்கான இரண்டாவது அலை உருவாகும் சாத்தியக் கூறுகள் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில், மிகவும் அதிர்ச்சி தரும் வகையில், 102 நாள்களுக்குப் பிறகு நாட்டில் புதிதாக 35,871 பேருக்கு
புது தில்லி: நாட்டில் கரோனா பேரிடருக்கான இரண்டாவது அலை உருவாகும் சாத்தியக் கூறுகள் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில், மிகவும் அதிர்ச்சி தரும் வகையில், 102 நாள்களுக்குப் பிறகு நாட்டில் புதிதாக 35,871 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், நாட்டில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,14,74,605 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
எட்டாவது நாளாக கரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதால், நாடு முழுவதும் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,52,364 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 172 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 1,59,216 ஆக உயர்ந்துள்ளது.
Advertisement
கடந்த 102 நாள்களில் இல்லாத வகையில் இன்று காலையுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 35,871 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கடைசியாக கடந்த டிசம்பர் 6-ஆம் தேதி 36 ஆயிரம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.