முகப்பு
கோப்புப்படம்
இந்தியா

ராஜஸ்தானில் 5ஆம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் நடப்பாண்டு தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:47 PM
கோப்புப்படம்
பகிர்:

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் நடப்பாண்டு தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது. 

எனினும் கரோனா தொற்று பரவல் நிலைகளுக்கேற்ப பள்ளிகள் திறக்கப்பட்டு கட்டுப்பாடுகளுடன் செயல்பட்டன. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டு சரிவர நடைபெறாத காரணத்தால் ஒன்றாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக ராஜஸ்தான் மாநில கல்வி அமைச்சர் கோவிந்த் சிங் வியாழக்கிழமை அறிவித்தார்.

அதேசமயம் இதர வகுப்புகளுக்கு தேர்வுகள் நடத்துவது குறித்து அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →