மேற்கு வங்கத் தேர்தல்: மார்ச் 21இல் தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார் அமித்ஷா
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மார்ச் 21ஆம் தேதி பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா வெளியிடுகிறார்.
இந்தியாமேற்கு வங்கத் தேர்தல்: மார்ச் 21இல் தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார் அமித்ஷா
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மார்ச் 21ஆம் தேதி பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா வெளியிடுகிறார்.
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மார்ச் 21ஆம் தேதி பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா வெளியிடுகிறார்.
மேற்குவங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மார்ச் 27ஆம் தேதி முதல் 8 கட்டங்களாக நடைபெறவுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆளும் திரிணமூல் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையில் பாஜக தேர்தல் அறிக்கை மார்ச் 21ஆம் தேதி வெளியாக உள்ளது. இதற்கான அறிவிப்பை மாநில பாஜக தலைவர் கைலாஷ் விஜயவர்ஜியா வெளியிட்டார்.
மார்ச் 21ஆம் தேதி கல்கத்தாவில் பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட உள்ளார். இந்த தேர்தல் அறிக்கையில் வெளியாக உள்ள அறிவிப்புகள் குறித்து பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.