முகப்பு
இந்தியா

இலங்கையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 13 பேர் பலி, 31 பேர் காயம்

மத்திய இலங்கையில் சனிக்கிழமை பயணிகள் பேருந்து ஒன்று சாலையிலிருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 13 பேர் பலியாகினர் மற்றும் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Updated On : 20 மார்ச், 2021 at 11:08 AM
இலங்கையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 13 பேர் பலி, 31 பேர் காயம்
பகிர்:

கொழும்பு: மத்திய இலங்கையில் சனிக்கிழமை பயணிகள் பேருந்து ஒன்று சாலையிலிருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 13 பேர் பலியாகினர் மற்றும் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

கொழும்பிலிருந்து கிழக்கே 240 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பசாரா நகருக்கு அருகே பேருந்து ஒன்று செங்குத்துப்பாதையில் கவிழ்ந்து விழுந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி அஜித் ரோஹானா கூறுகையில்,

Advertisement

ஆரம்ப விசாரணையில் ஓட்டுநரின் அலட்சியமே விபத்துக்குக் காரணமாகும் என்று கூறியுள்ளார். 

ஓட்டுநர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பேருந்தில் சுமார் 70க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.