இந்தியா

மகாராஷ்டிரத்தில் 10, 12-ம் வகுப்புத் தேர்வு ஆன்லைனில் நடைபெறாது: கல்வி வாரியம் 

மகாராஷ்டிரத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ஆன்லைனில் நடத்தப்படமாட்டாது என்று மாநில கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் சனிக்கிழமை அறிவித்தார். 

PTI

மகாராஷ்டிரத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ஆன்லைனில் நடத்தப்படமாட்டாது என்று மாநில கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் சனிக்கிழமை அறிவித்தார். 

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு நேரடியாகச் சென்று தான் தேர்வெழுத வேண்டும். மேலும் அவரவர் பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளது. 

பொதுத்தேர்வு தேதிகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளன. எழுத்துத் தேர்வுகள் முடிந்ததும் நடைமுறைத் தேர்வுகள் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

12-ம் வகுப்புக்கு ஏப்ரல் 23 முதல் மே 21 வரையிலும், 10-ம் வகுப்புக்கு ஏப்ரல் 29 முதல் மே 20 வரையிலும் தேர்வு நடைபெறும் என்று மகாராஷ்டிர கல்வி வாரியம் கடந்த மாதம் அறிவித்தது. 

இந்த பொதுத்தேர்வுகள் வழக்கமாக பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடத்தப்படுகின்றன. ஆனால் இந்தாண்டு கரோனா தொற்றுநோய் காரணமாக அட்டவணை மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் செய்ய வேண்டியது

தைபேயில் கத்திக் குத்து தாக்குதல்: 9 பேர் காயம்

2025 தேர்தல்கள்: பாஜகவின் அமோக வெற்றியும் காங்கிரஸின் ஆறுதல் வெற்றியும்!

பிரதமர் மோடி நாளை மே.வங்கம், அசாம் பயணம்!

கடைசி டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன்!

SCROLL FOR NEXT