இந்தியா

தில்லி அரசின் திட்டத்தில் மத்திய அரசின் பெயர்: கேஜரிவால் கண்டனம்

DIN


தில்லி அரசு செயல்படுத்தும் திட்டத்தில் மத்திய அரசின் பெயர் திணிக்கப்படுவதற்கு முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தில்லியில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ரேஷன் பொருள்களை வாங்குவதால், வீடுகளுக்கே ரேஷன் பொருள்களைக் கொண்டு சேர்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், தில்லி அரசின் திட்டத்தில் மத்திய அரசின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளதாக அரவிந்த் கேஜரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக மேலும் அவர் பேசியதாவது, இந்தத் திட்டத்தை அமல்படுத்தக்கூடாது என்று மத்திய அரசு தில்லி அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. 

இதனைத் தொடர்ந்து எனது அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டேன். அப்போது ரேஷன் பொருள்களை வீடுகளில் சேர்க்கும் திட்டத்தில் இருக்கும் பெயர்களை அகற்ற வேண்டும் என்றும், பெயர் இல்லாமல் திட்டத்தை செயல்படுத்தவும் உத்தரவிட்டுள்ளேன் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT