முகப்பு
கோப்புப்படம்
இந்தியா

கேரளத்தில் பாஜக, கூட்டணியின் 3 வேட்புமனுக்கள் நிராகரிப்பு

கேரள சட்டபேரவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் 3 பேரின் வேட்புமனுக்கள் உரிய ஆவணங்கள் இணைக்காத காரணத்தால் தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:48 PM
கோப்புப்படம்
பகிர்:

கேரள சட்டபேரவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் 3 பேரின் வேட்புமனுக்கள் உரிய ஆவணங்கள் இணைக்காத காரணத்தால் தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டன.

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, கூட்டணிக் கட்சிகளுடன் போட்டியிடுகிறது. தேர்தலில் போட்டியிடுவதற்காக பாஜக உள்பட அனைத்துக் கட்சி வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை சனிக்கிழமை நடைபெற்றது. 

இதில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான அதிமுக சார்பில் போட்டியிடும் தேவிகுளம், தலசேரி மற்றும் குருவாயூர் தொகுதி வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் பாஜக தேசியத் தலைவரின் கையொப்பமிட்ட ஆவணங்கள் இணைக்கத் தவறிய காரணத்தால் தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டன. 

இதனால் தலசேரியில் போட்டியிட இருந்த கண்ணூர் மாவட்டத்தின் பாஜக தலைவர் ஹரிதாஸ், தேவிகுளம் அதிமுக வேட்பாளர் தனலஷ்மி, குருவாயூர் தொகுதி பாஜக வேட்பாளர் நிவேதிதா ஆகியோர் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 

இது பாஜக மற்றும் கூட்டணிக் கட்சியினரிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.  

முழு கட்டுரையைப் படிக்க →