இல்லத்தரசிகளுக்கு ரூ.2000 : தேர்தல் அறிக்கையை வெளியிட்ட கேரள காங்கிரஸ் 
இந்தியா

இல்லத்தரசிகளுக்கு ரூ.2000 : தேர்தல் அறிக்கையை வெளியிட்ட கேரள காங்கிரஸ்

நடைபெற உள்ள கேரள மாநில சட்டபேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சனிக்கிழமை தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

DIN

நடைபெற உள்ள கேரள மாநில சட்டபேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சனிக்கிழமை தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

நடைபெற உள்ள 5 மாநில சட்டபேரவைத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களது தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்நிலையில் கேரளத்தில் எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் சனிக்கிழமை தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

இதில் காருண்யா சுகாதாரத் திட்டம், வீடற்றோருக்கான வீட்டு வசதித் திட்டம், 5 கிலோ இலவச அரிசி உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.2000 வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது மக்களின் வாழ்வாதாரம் உறுதிப்படுத்தப்படும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் தெரிவித்தார்.

140 உறுப்பினர்களைக் கொண்ட கேரள சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகள் உயிருக்கு ஆபத்து! கூட்டு பாலியல் கொடுமைக்கு ஆளான மருத்துவ மாணவியின் பெற்றோர் கதறல்!!

தங்கம் விலை அதிரடி உயர்வு! இன்றைய நிலவரம்!

கிணறுக்குள் குதித்த பெண்! காப்பாற்றச் சென்ற தீயணைப்பு வீரர் உள்பட மூவர் பலி!!

இருமல் மருந்து விவகாரம்: சென்னையில் அமலாக்கத் துறை சோதனை

மேட்டூர் அணை நீர்வரத்து குறைவு

SCROLL FOR NEXT