இந்தியா

வேட்புமனு நிராகரிப்பு: கேரள உயர்நீதிமன்றத்தில் பாஜக வேட்பாளர்கள் வழக்கு

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்புமனுக்களை நிராகரித்தது தொடர்பாக பாஜக வேட்பாளர்கள் இருவர் கேரள உய்ரநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். 

DIN

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்புமனுக்களை நிராகரித்தது தொடர்பாக பாஜக வேட்பாளர்கள் இருவர் கேரள உய்ரநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். 

கேரள சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனுக்கள் பரிசீலனை சனிக்கிழமை நடைபெற்றது. அதில், கண்ணூா் மாவட்டத்தில் உள்ள தலச்சேரி தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிட்ட அக்கட்சியின் மாவட்டத் தலைவா் என்.ஹரிதாஸின் வேட்புமனுவும் திருச்சூா் மாவட்டத்தில் உள்ள குருவாயூா் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிட்ட அக்கட்சியின் மாநில மகளிா் பிரிவு தலைவரான நிவேதிதாவின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டது.

தங்கள் வேட்புமனுக்களில் இருந்த சிறு தவறுகளைச் சுட்டிக்காட்டி அவற்றை மாவட்ட தோ்தல் அதிகாரி நிராகரித்துவிட்டதாக இருவரும் குற்றம்சாட்டியுள்ளனர். 

இதனை எதிர்த்து நீதிமன்றத்தை நாட இருப்பதாக கூறியதாக பாஜக வேட்பாளர்கள் தற்போது கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

விரைவில் கேரள உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கவுள்ளது. 

140 உறுப்பினர்களைக் கொண்ட கேரள சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தரையிறங்க முடியாமல் திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்! | செய்திகள்: சில வரிகளில் | 20.12.25

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

SCROLL FOR NEXT