முகப்பு
இந்தியா

நிலச்சரிவு: ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை மூடல்

ஜம்மு-காஷ்மீரில் உள்ள ராம்பன் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. 

Updated On : 23 மார்ச், 2021 at 1:06 PM
ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு (கோப்புப்படம்)
பகிர்:

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் உள்ள ராம்பன் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. 

காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் 270 கி.மீ. தூரம் உள்ள நெடுஞ்சாலையில் உள்ள டிக்டோல் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 

நிலச்சரிவால் ஏற்பட்ட கற்களை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நிலச்சரிவு காரணமாக சாலைப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. 

Advertisement

இதனால், ராம்பன் மாவட்ட எல்லையில் 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சிக்கித் தவித்துவருவதாக அதிகாரி தெரிவித்துள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.