முகப்பு
இந்தியா

5 மாநிலங்களில் நாட்டின் 77% கரோனா

நாட்டில் பரவியுள்ள மொத்த கரோனாவில் 77 சதவிகிதம் கரோனா தொற்று 5 மாநிலங்களில் மட்டுமே பரவியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:50 PM
பகிர்:

நாட்டில் பரவியுள்ள மொத்த கரோனாவில் 77 சதவிகிதம் கரோனா தொற்று 5 மாநிலங்களில் மட்டுமே பரவியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதனைத் தடுக்க மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

எனினும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 47 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு புதிதாக 275 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement

இதில் 5 மாநிலங்களில் மட்டும் 77 சதவிகிதம் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரம், கர்நாடகம், பஞ்சாப், சத்தீஸ்கர், குஜராத் ஆகிய மாநிலங்களில் மட்டும் நாட்டிக் மொத்தமாக பரவியுள்ள கரோனாவில் 77 சதவிகிதம் கண்டறியப்பட்டுள்ளது. 

அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 28,699 பேருக்கும், பஞ்சாபில் 2,254 பேருக்கும், கர்நாடகத்தில் 2,010 பேருக்கும் கரோனா கண்டறியப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments