முகப்பு
இந்தியா

கேரள சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

கேரள சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பிரகாஷ் ஜவடேகர் புதன்கிழமை வெளியிட்டார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:50 PM
கேரள சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு
பகிர்:

கேரள சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பிரகாஷ் ஜவடேகர் புதன்கிழமை வெளியிட்டார்.

கேரள சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து ஆளும் இடது முன்னணியும், எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜகவும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. 

இந்நிலையில் சட்டபேரவைத் தேர்தலையொட்டி பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான பிரகாஷ் ஜவடேகர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். 

ஆளும் இடது முன்னணி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஏற்கெனவே தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →