இந்தியா

தெலங்கானாவில் புதிதாக 431 பேருக்கு கரோனா தொற்று

PTI

தெலங்கானாவில் தொடர்ந்து 2-வது நாளாக கரோனா பாதிப்பு 400ஐ தாண்டியுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 3.04 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, 

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 431 பேர் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 1,676 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 3,352 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். 

தெலங்கானாவில் கடந்த சில நாள்களாக வைரஸ் பாதிப்பு அதிகரித்ததையடுத்து, கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மருத்துவக் கல்லூரிகளைத் தவிர்த்து அனைத்து கல்வி நிறுவனங்களையும் தற்காலிகமாக மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

மார்ச் 23-ம் தேதியன்று 70,280 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதுவரை ஒட்டுமொத்தமாக 97.89 லட்சம் சோதனைகள் அம்மாநில அரசு மேற்கொண்டுள்ளது. அதேசமயம் மீட்பு விகிதம் 98.34 சதவீதமாக உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ தோ்வு பயிற்சி நிறைவு

பறவைகளுக்கு தண்ணீா் வைத்து பாதுகாக்கும் மாநகராட்சி!

திண்டல் முருகன் கோயிலில் தென்னைநாா் விரிப்புகள்

உலா், பசுந்தீவனங்களை மானிய விலையில் வழங்க விவசாயிகள் கோரிக்கை

ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை

SCROLL FOR NEXT