கட்டுக்கடங்காத கரோனா: மகாராஷ்டிரம் பீட் மாவட்டத்தில் பொதுமுடக்கம் அமல்
அதிகரித்து வரும் கரோனா தொற்று காரணமாக மகாராஷ்டிர மாநிலத்தின் பீட் மாவட்டத்தில் மார்ச் 26 முதல் ஏப்ரல் 4 வரை முழுபொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் கரோனா தொற்று காரணமாக மகாராஷ்டிர மாநிலத்தின் பீட் மாவட்டத்தில் மார்ச் 26 முதல் ஏப்ரல் 4 வரை முழுபொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.
குறிப்பாக மற்ற மாநிலங்களைக் காட்டிலும் மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்நிலையில் பீட் மாவட்டத்தில் தொற்று பாதிப்பைக் கட்டுக்குள் வைக்க மார்ச் 26 முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம் அறிவிக்கபட்டுள்ளது
இதனால் பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், உணவகங்கள் உள்ளிட்டவை மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் அத்தியாவசிய சேவைகளுக்கு இந்த பொதுமுடக்கத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.