பரவும் கரோனா: ஹோலி கொண்டாட மேகாலய அரசுத் தடை
கரோனா பரவி வருவதன் எதிரொலியாக ஹோலி கொண்டாட மேகாலய அரசு தடை விதித்துள்ளது.
கரோனா பரவி வருவதன் எதிரொலியாக ஹோலி கொண்டாட மேகாலய அரசு தடை விதித்துள்ளது.
நாடு முழுவதும் ஹோலி, கும்பமேளா உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து கொண்டாடப்படவுள்ளதால், கரோனா பரவலுக்கேற்ப மாநில அரசுகள் கட்டுப்பாடுகள் விதிக்கலாம் என்று மத்திய அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது.
அதனைத் தொடர்ந்து கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு அரசுகள் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.
பல்வேறு மாநிலங்களில் திறக்கப்பட்ட கல்வி நிலையங்கள் மீண்டும் மூடப்பட்டுள்ளன. உத்தரகண்ட் அரசு கும்பமேளா, ஹோலி பண்டிகைகளுக்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
இந்நிலையில் மேகாலய அரசு ஹோலி பண்டிகையைக் கொண்டாட தடை விதித்துள்ளது. மேலும் கரோனா பரவல் அதிகமாக உள்ளதால், திடல், பூங்கா, மத வழிபாட்டு தலங்கள் போன்ற பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.