மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 35,952 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டிலேயே கேரளம், மகாராஷ்டிரம், குஜராத், கர்நாடகம், தமிழகம் மத்தியப் பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக மகாராஷ்ரத்தில் தினசரி பாதிப்பு அதிகமாக உள்ளது.
இதைக் கட்டுப்படுத்த முடியாமல் மாநில அரசும் திணறி வருகிறது. இங்கு கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 35,952 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 26,00,833ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவுக்கு ஒரேநாளில் மேலும் 111 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 53,795ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி 2,62,685 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனாவிலிருந்து இன்று 20,444 பேர் குணமடைந்தனர்.
இதுவரை 22,83,037 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 13,62,899 பேர் வீட்டுக்கண்காணிப்பில் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.