இந்தியா

வேளாண் போராட்டம்: டிக்ரி எல்லையில் விவசாயி பலி

DIN

தில்லி நகரின் டிக்ரி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 61 வயதுடைய விவசாயி இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். 

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியின் பல்வேறு எல்லைகளில் பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 121-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டத்தில் ஏராளமான முதியவர்களும் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில், டிக்ரி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 61 வயதுடைய விவசாயி இன்று காலை இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இறந்த விவசாயி பஞ்சாப் மாநிலம் பதின்டா பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இவர் வேளாண் போராட்டத்தின் தொடக்கத்திலிருந்தே எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

SCROLL FOR NEXT