அசாம்: 47 தொகுதிகளுக்கு நாளை முதல்கட்ட வாக்குப்பதிவு
அசாம் மாநிலத்தில் நாளை (மார்ச் 27) முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதையொட்டி, பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியாஅசாம்: 47 தொகுதிகளுக்கு நாளை முதல்கட்ட வாக்குப்பதிவு
அசாம் மாநிலத்தில் நாளை (மார்ச் 27) முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதையொட்டி, பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அசாம் மாநிலத்தில் நாளை (மார்ச் 27) முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதையொட்டி, பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அசாம் மாநிலத்தில் 12 மாவட்டங்களிலுள்ள 47 தொகுதிகளுக்கு நாளை முதல்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று அம்மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், 47 தொகுதிகளிலும் 81 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாவும், அதில் 40,77,210 ஆண் வாக்காளர்களும், 40,32,481 பெண் வாக்காளர்களும் உள்ளனர். வாக்களிப்பதற்காக 11,537 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மூன்றுகட்டங்களாக நடைபெறும் தேர்தலில் பெருவாரியான வாக்குகளைப் பெற்று மீண்டும் வெற்றி பெற பாஜக முனைப்புக்காட்டி வருகிறது.