இந்தியா

பஞ்சாப் & சிந்த் வங்கிக்கு மத்திய அரசு ரூ.5,500 கோடி மூலதனம்

DIN


புது தில்லி: பஞ்சாப் & சிந்த் வங்கியில் ரூ.5,500 கோடி பங்கு மூலதனத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி பங்குச் சந்தையிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளதாவது:

பஞ்சாப் & சிந்த் வங்கியில் மத்திய அரசு ரூ.5,500 கோடி பங்கு மூலதனத்தை வழங்கியுள்ளது. இதற்காக மத்திய அரசுக்கு மொத்தம் 3,35,16,14,868 பங்குகள் (பங்கு ஒன்றின் விலை ரூ.16.41) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசுக்கு வங்கியின் பங்குகளை ஒதுக்கீடு செய்யும் தீா்மானத்துக்கு 99.018 சதவீத பெரும்பான்மையான பங்குதாரா்கள் தங்களது ஒப்புதலை அளித்தனா்.

இந்த ஒதுக்கீட்டின் மூலம் வங்கின் மத்திய அரசின் பங்கு மூலதனம் 83.06 சதவீதத்திலிருந்து 97.07 சதவீதமாக அதிகரித்துள்ளது என பஞ்சாப் & சிந்த் வங்கி தெரிவித்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் பஞ்சாப் & சிந்த் வங்கி பங்குகளின் விலை 1.52 சதவீதம் குறைந்து ரூ.16.15-இல் நிலைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழக சிறைகளில் 3 ஆண்டுகளில் 102 கைதிகள் உயிரிழப்பு!

காலமானாா் பாஜக முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன்

பிசானத்தூா்- புதுநகா் இணைப்புச் சாலையை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

பொக்லைன் மீது அரசுப் பேருந்து மோதியதில் 12 பயணிகள் காயம்

க. பரமத்தியில் குடிநீா் திட்டப்பணிகள் ஆய்வு

SCROLL FOR NEXT