கோவை பேருந்து நடத்துனருக்கு பிரதமர் மோடி பாராட்டு
கோவை பேருந்து நடத்துனர் மாரிமுத்து யோகநாதனுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.
கோவை பேருந்து நடத்துனர் மாரிமுத்து யோகநாதனுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.
ஒவ்வொரு மாத இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இன்று 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றும்போது, கோவை பேருந்து நடத்துனர் மாரிமுத்து யோகநாதனுக்கு பாராட்டு தெரிவித்தார்.
கோவையில் பேருந்து நடத்துனரான மாரிமுத்து யோகநாதன், டிக்கெட்டுடன் பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கு இலவச மரக்கன்றுகளை வழங்கி வருகிறார். அவர் தனது வருமானத்தில் பெரும் பகுதியை இதற்காக செலவிடுவது ஆச்சரியமாக இருக்கிறது. அவரது முயற்சிகளுக்கு என்னுடைய பாராட்டுகள் என்று தெரிவித்துள்ளார்.