இந்தியா

'மனதின் குரல்' நிகழ்ச்சியில் மிதாலி ராஜ், பி.வி.சிந்துவுக்கு பிரதமர் மோடி புகழாரம்

DIN

இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து உள்ளிட்டோருக்கு மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.

'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், மகளிர் தினத்தை கொண்டாடும் இந்த மார்ச் மாதத்தில் பெண்கள் பலர் சாதனைகளை புரிந்துள்ளனர். 

ஐ.எஸ்.எஸ்.எஃப் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் இந்தியா முதலிடம் பெற்றது.  

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வீராங்கனை மிதாலி ராஜ் சமீபத்தில் நடைபெற்ற போட்டியில் 10 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தார். 

கிரிக்கெட்டில் பத்தாயிரம் ரன்கள் எடுத்த முதல் இந்திய பெண் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றார். 

இதற்கிடையில், பி.டபிள்யூ.எஃப் சுவிஸ் ஓபன் சூப்பர் 300 போட்டியில் பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். சாதனை புரிந்த அவர்களுக்கு என் பாராட்டுகள். 

இதேபோன்று பல்வேறு பகுதிகளில் இருந்து திறமையான பெண்களைவெளியே கொண்டு வர வேண்டும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT