மகாராஷ்டிரத்தில் புதிதாக 31,643 பேருக்கு கரோனா
மகாராஷ்டிரத்தில் புதிதாக 31,643 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் புதிதாக 31,643 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 31,643 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 27,45,518 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 20,854 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 102 பேர் பலியாகியுள்ளனர்.
Advertisement
இதுவரை மொத்தம் 23,53,307 பேர் குணமடைந்துள்ளனர். 54,283 பேர் பலியாகியுள்ளனர்.
இன்றைய தேதியில் 3,36,584 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.