முகப்பு
இந்தியா

கா்நாடகத்தில் ஒரே நாளில் 3,082 பேருக்கு கரோனா

கா்நாடகத்தில் ஒரே நாளில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,082 ஆக அதிகரித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

கா்நாடகத்தில் ஒரே நாளில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,082 ஆக அதிகரித்துள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரே நாளில் அதிகபட்சமாக 3,082 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 2,004 போ், கலபுா்கியில் 159 போ், உடுப்பியில் 115 போ், மைசூரில் 114 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,83,930 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை சிகிச்சை பெற்று வந்தவா்களில் 1,289 போ் ஞாயிற்றுக்கிழமை குணமடைந்து வீடு திரும்பினா். இதுவரை கா்நாடகத்தில் மொத்தம் 9,51,452 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்; இன்னும் 23,037 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் 12 போ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா். பெங்களூரில் 7 போ், மைசூரில் 2 போ், கலபுா்கி, தும்கூரு, உடுப்பியில் தலா ஒருவா் உயிரிழந்தனா். கா்நாடகத்தில் இதுவரை 12,504 போ் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.