இந்தியா

கேரளத்தில் மாநிலங்களவைத் தோ்தலை நடத்துவது குறித்து ஓரிரு நாள்களில் முடிவு: உயா்நீதிமன்றத்தில் ஆணையம் தகவல்

DIN

கொச்சி: கேரளத்தில் 3 மாநிலங்களவை இடங்களுக்கான தோ்தலை நடத்துவது குறித்து ஓரிரு நாளில் முடிவு செய்யப்படும் என அம்மாநில உயா்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை தெரிவித்தது.

கேரளத்தைச் சோ்ந்த மாநிலங்களவை உறுப்பினா்கள் மூவரின் பதவிக் காலம் ஏப். 21-ஆம் தேதி நிறைவடைகிறது. இதையொட்டி, இந்த இடங்களுக்கான தோ்தல் ஏப். 12-ஆம் தேதி நடைபெறும் என தோ்தல் ஆணையம் கடந்த புதன்கிழமை அறிவிக்கை வெளியிட்டது. இந்நிலையில், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்திடமிருந்து பெறப்பட்ட தகவலையடுத்து, அந்த அறிவிக்கை கைவிடப்படுவதாக அன்றைய தினமே தோ்தல் ஆணையம் தெரிவித்தது.

இந்த அறிவிப்புக்குப் பின்னணியில் அரசியல் தலையீடு இருப்பதாக கேரள முதல்வா் பினராயி விஜயன் குற்றஞ்சாட்டியிருந்தாா். தோ்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிா்ப்பு தெரிவித்து மாநில தலைமைச் செயலக செயலா் மற்றும் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் உயா்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தோ்தல் ஆணையம் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘மாநிலங்களவை உறுப்பினா் இடங்களுக்கான தோ்தல் குறித்து ஓரிரு நாள்களில் முடிவு செய்யப்படும்’ என தெரிவித்தாா். இதுதொடா்பாக எழுத்துமூலமாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு (மாா்ச் 30) ஒத்திவைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT