கேரளத்தில் புதிதாக 2,300-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா
கேரளத்தில் புதிதாக 2,389 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
கேரளத்தில் புதிதாக 2,389 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
கேரள கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில அரசு வெளியிட்டுள்ளது.
"புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 13 பேர் சுகாதாரப் பணியாளர்கள். இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 11,21,931 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1,946 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 10,92,365 பேர் குணமடைந்துள்ளனர்.
Advertisement
மதியம் 2 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 58,557 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 4.08 சதவிகிதம். இதுவரை மொத்தம் 1,31,09,347 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
மேலும் 16 பேர் கரோனா தொற்றுக்கு பலியானது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 4,606 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி 24,650 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்."