முகப்பு
இந்தியா

ஆமதாபாத் இந்திய மேலாண்மைக் கழகத்தில் 70 பேருக்கு கரோனா

ஆமதாபாத்தில் உள்ள இந்திய மேலாண்மை கழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:53 PM
பகிர்:

ஆமதாபாத்தில் உள்ள இந்திய மேலாண்மை கழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது. 

ஆகமதாபாத்தில் உள்ள இந்திய மேலாண்மை கழகத்தில்(இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்)கடந்த ஞாயிற்றுக்கிழமை மாணவர்கள், ஒரு பேராசிரியர் என 40 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இதையடுத்து இன்று கரோனா பாதிப்பு எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளதாக ஆமதாபாத் மாநகராட்சியின் சுகாதார அதிகாரி மெஹுல் ஆச்சார்யா தெரிவித்தார்.

Advertisement

தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தனிமையில் வைக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். 

மேலும் இங்கு மாணவர்கள் மற்றும் இப்பகுதி மக்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும் இப்பகுதியில் உள்ளவர்கள் அனைவரும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments