உத்தரப் பிரதேச மாநிலம், பலியா மாவட்டத்தில் சட்ட மேதை அம்பேத்கர் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து கூடுதல் ஆய்வாளர் சஞ்சய் யாதவ் தெரிவித்தது,
குந்தா கிராமத்தில் உள்ள அம்பேத்கர் சிலை திங்கள்கிழமை அதிகாலை சமூக விரோதிகள் சிலரால் அழிக்கப்பட்டுள்ளதாக பில்தாரா சாலையில் துணை மாஜிஸ்திரேட் சர்வேஷ் யாதவ் தெரிவித்தார்.
இதனால், தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறை அதிகாரிகள் அவர்கைள சமாதானப்படுத்தினர். விரைவில் புதிய சிலை நிறுவப்படும் என்று உறுதியளித்தனர்.
இதையடுத்து, சிலையைச் சேதப்படுத்தி அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மீது பீம்புரா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.