முகப்பு
இந்தியா

கரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள் அதிகரிப்பு: தில்லி அரசு

மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள படுக்கை வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:53 PM
கோப்புப்படம்
பகிர்:


கரோனா வைரஸ் நோய்த் தொற்று பாதிப்பு அதிகரிப்பதைத் தொடர்ந்து, மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள படுக்கை வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது:

"தில்லியில் கரோனா தொற்று அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு, சில மருத்துவமனைகளில் கரோனாவுக்கென ஒதுக்கப்பட்டுள்ள சாதாரண மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு வார்டுகளில் படுக்கை வசதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது. சூழலுக்கேற்ப தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றினாலே போதும்."

Advertisement

தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 992 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments